இந்திய குடியரசு கட்சி சார்பில் குடிசை மாற்று வாரியத்தில் ஏழைகளுக்கு வீடு கேட்டு மனு,
திருச்சி, ஜூலை, 31: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு முகம் நடைபெற்று வருகிறது இந்த முகாமில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் திருச்சி மாவட்ட சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயில் மில், உறையூர்,மிளகு பாறை, சத்திரப்பட்டி, மணச்சநல்லூர், வையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்டபெண்கள் குடிசை மாற்று வாரியத்தில் வீடு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய குடியரசு கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்,