பேருந்து சிறைபிடிக்கப்படும்

 பேருந்து சிறைபிடிக்கப்படும் எஸ்டிபி கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் அறிவிப்பு:


திருச்சி, மே.10: திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பால்பண்ணை ரவுண்டானத்தில்

தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டு அன்றாடம் புலம்பி கொண்டு செல்கின்றனர்,

இதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு மற்றும் பேருந்து வளைவு சாலை குறுகலாக இருப்பதும் மேலும் மாநகர பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல்

சாலை வளைவு முன்பாக நிறுத்திக் கொள்வதாலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்தும் ஏற்படுகிறது காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும்

தனியார் பேருந்து ஓட்டுநர்கள் தொடர்ந்து இதுபோன்ற அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர் எனவே இது போன்று போக்குவரத்து விதியை மீறி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சாலையில் நிறுத்தும் பேருந்துகளைசிறைபிடிக்கப்படும் என திருச்சி மாவட்ட எஸ் டி பி ஐ கட்சி தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் தமிம் அன்சாரி இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Post a Comment

Previous Post Next Post

Contact Form