மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


திருச்சி, மே, 13:                                      திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 28-வது வார்டு அண்ணாநகர் 2-வது கிராஸ் விளையாட்டு மைதானத்தில் உள்ள மது பாட்டில்கள், குப்பைகளை அகற்ற வேண்டும். விளையாட்டு மைதானத்தின் வேலிகளை அகற்றிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


காமராஜ் நகரில் உள்ள ஆழ்குழாய் கிணற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.1,2 மற்றும் 4-வது கிராஸ் ஆகிய இடங்களில் உள்ள பள்ளங்களை சரிசெய்து உடனடியாக சாலையை அமைக்க வேண்டும். தென்னூர் ஆஞ்சநேயர் கோவில் சாலையில் உள்ள பள்ளங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும். குத்பிஷா நகர் பகுதியில் முழுமையாக பாதாளச் சாக்கடை இணைப்பை சரிசெய்து சாலையை அமைத்து கொடுக்க வேண்டும்.தில்லைநகர் மெயின் ரோட்டில் உள்ள உடைந்த நிலையில் இருக்கும் நடைபாதையை உடனடியாக சரிசெய்ய வேண்டும். தென்னூர் அண்ணாநகர் வ.உ.சி. சாலையில் அரைகுறையாக போடப்பட்டிருக்கும் நடைபாதையை முழுமையாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி குழு சார்பில் தென்னூர் அரசமரம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.


ஆர்பாட்டத்திற்கு கிளை செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மேற்கு பகுதி செயலாளர் ரபீக் அஹமது, சந்திரன், மூத்த தோழர் நடராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில்  அப்துல் கையூம், கணேசன்,சீனிவாசன்,ஷேக் மொய்தீன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் வள்ளி நன்றி கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form