திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரை விற்று 3 பேர் சிறையில் உள்ள நிலையில் அதில் ஒருவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி, மார்ச், 20: திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் மெயின் ரோட்டில் பழக் கடை வைத்து நடத்தி வருபவர் சேகர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவரது கடை முன்பு நின்று கொண்டிருந்த
அரியமங்கலம் காமராஜர் நகர் அப்துல் கலாம் ஆசாத் தெருவை சேர்ந்த அம்ருதீன் அதே பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது (எ) பிரியாணி(22), நாகூர் கனி மகன் சித்திக் ஆகிய 3 பேரையும் பார்த்து வேலைக்கு செல்லாமல் எதற்கு
இங்கு நிற்கிறீர்கள் என்று சேகர் கேட்டதாகவும் அதற்கு அம்ருதீனும், சாகுல் ஹமீது எங்களிடம் போதை மாத்திரை இருக்கிறது அதைதான் விற்றுக்கொண்டு இருக்கின்றோம் உனக்கும் மாத்திரை என சேகரிடம் கேட்டுள்ளனர்
அதை சேகர் வாங்காமல் அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து
அம்ருதீன், சாகுல் ஹமீது (எ)பிரியாணி, முகமது சித்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சியில் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அம்ருதீன் மீது திருச்சி மாநகர கமிஷனர் சத்திய பிரியா உத்தரவின் பேரில் பொன்மலை உதவி கமிஷனர் காமராஜ் பரிந்துரையின்படி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவனந்தம் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்
