எழுபதாவது பிறந்த நாள்

 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70. வது பிறந்தநாள் கருத்தரங்கம் நடைபெற்றது,


திருச்சி, மார்ச், 12:                                      திமுக கட்சியின் தலைவரும் தமிழ் நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு. திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்,


அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட. பழைய பால்பண்னை அருகே உள்ள தனியார் அரங்கில் கருத்தரங்க நிகழ்ச்சி மார்கெட் பகுதி செயலாளர் எ.எம்.ஜீ விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.


இதில் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும்.பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யா மொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தலைமை கழக பேச்சாளருமான கம்பம் செல்வேந்திரன்,தமிழ் தாய் காத்த காவலன் என்ற தலைப்பில் கருத்தரங்கை நிகழ்த்தினார்,

திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மண்டல மூன்றின் தலைவருமான மதிவாணன் முன்னிலை வகித்தார்,


இந்நிகழ்சியில் வட்ட பகுதி கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆண்கள் பெண்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form