அரியமங்கலத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுரைகளையும், ஆலோசனையும் கூறப்பட்டது
திருச்சி, பிப் 16: திருச்சி மாவட்டம் அரியமங்கலம் காவல்துறை சார்பில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி அரியமங்கலம் ரயில் நகர் ஆட்டோ ஸ்டாண்டில் நடைபெற்றது, இதில் அரியமங்கலம் காவல் ஆய்வாளர் திருவானந்தம் கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தொடரும் குற்ற சம்பவங்கள் குறித்தும் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள்,என்னென்ன என்பதையும் விளக்கமாக கூறினார்,
மேலும் ஆட்டோவில் ஏறும் பயணிகள் சந்தேகத்திற்கு உரியவர்களாக தெரிந்தால் அவர்களை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.விழிப்புணர்வுடன் செயல்பட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பார்கள்,மேலும் சாலையில் செல்லும் பொழுது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் வாகனத்தை ஓட்டி செல்ல வேண்டும்,உள்ளிட்ட அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கூறினார்,
அதை தொடர்ந்து இன்று எஸ் ஐ டி கல்லூரி வளாகத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நடைபெற்ற விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளையும் ஆலோசனையும் ஆய்வாளர் கூறினார்,
இந்த கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


