பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்

  சீட்டு எங்களுக்கு முக்கிம் அல்ல கொள்கை தான் எங்களுக்கு முக்கியம் - மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி பேட்டி.


திருச்சி, பிப்,20:                                  மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாக குழு கூட்டம் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் மாநில அவைத் தலைவர் மண்னை செல்லசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன்அன்சாரி மற்றும் நிர்வாகிகள் நாச்சிகுளம் தாஜுதீன், நாகை முபாரக், பல்லாவரம் ஷபி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன்அன்சாரி பா.ஜ.க வை வீழ்த்த எதிர்க்கட்சிகட்சிகள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஒருங்கிணைத்து ஸ்டாலின் வழி நடத்தியது போல் அகில இந்திய அளவில் பா.ஜ.க வை எதிர்க்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும்.

ம.ஜ.க வின் பொருளாளராக இருந்த ஹாரூன் ரஷீத், அவைத்தலைவர் நாசர் ஆகியோர் கட்சிக்குள் சில குழப்பங்களை விளைவித்ததன் காரணமாக அவர்கள் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் நேற்று சிலரை கூட்டி எங்களை கட்சியிலிருந்து நீக்கியதாக தெரிவித்துள்ளார்கள்அது தவறு எங்கள் கட்சியை பொறுத்தவரை தலைமை நிர்வாக குழுவிற்கு தான் அதிகாரம் உள்ளது. இங்கு வந்திருப்பவர்கள் தான் தலைமை நிர்வாக குழுவை சேர்ந்தவர்கள்.

ஈரோடு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அவருக்கு ஆதரவாக நாங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

2024 தேர்தலில் போட்டியிட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி கேட்போம். தொகுதி கிடைத்தால் போட்டியிடுவோம் இல்லையென்றால் பா.ஜ.க வை வீழ்த்த 2021 சட்டமன்ற தேர்தலில் களப்பணியாற்றியது போல் களப்பணியாற்றுவோம். எங்களுக்கு தேர்தலை விட கொள்கை தான் முக்கியம்.

பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலைக்கு தொடர்ந்து நானும், தனியரசு, கருணாசும் குரல் கொடுத்தோம்.

அதே போல் சாதி, மதம் கடந்து வழக்கு பேதமின்றி பத்து வருடம், 15வருடங்களை கடந்த நீண்ட நாட்கள் ஆன ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். சட்டத்துக்கு உட்பட்டு முதல்வர் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் மரணமும் ஒரு குழப்பமான நிலையில் இருக்கிறது.பழ.நெடுமாறன் சொல்வது உண்மையாக இருந்தால் அது உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திதான் இது தொடர்ந்து விவாததில் உள்ளது. எனவே, பழநெடுமாறன் இது குறித்து மீண்டும் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் பிரச்சனையின் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக திருமாவளவன் கருத்து தெரிவித்திருக்கிறார் என்ற கேள்விக்கு

அண்ணன் திருமாவளவன், வைகோ, சீமான் ஆகியோர் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லி வருகின்றனர்.பழ நெடுமாறன் தான் இதனை மறுக்க வேண்டும். 

தற்போது அண்ணாமலை இலங்கை சென்று வந்துள்ளார்.அவர் அரசு ரீதியாக சென்று வந்துள்ளார். இந்நிலையில் இப்படிப்பட்ட செய்தியை பழநெடுமாறன் வெளியிட்டுள்ளார்.

இது மத்திய ஒன்றிய அரசின் சதியா என பழ.நெடுமாறன் மீண்டும் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார். 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியாகத்தான் உள்ளது , பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் அது எங்கள் ஆசை, தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட  போதைப் பொருட்கள் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளதாக தெரிகிறது எனவே தமிழக முதல்வர் அதையும் கவனத்தில் கொண்டு முற்றிலுமாக போதைப் பொருள்களை ஒழிக்க முன்வர வேண்டும்,எனக் கூறினார்,

இந்த சந்திப்பின் போது திருச்சி மாவட்ட நிர்வாகிகள் உட்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form