சமூக ஒற்றுமை வாகன பிரச்சாரம்

 ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் திருச்சியில்  சமூக ஒற்றுமைக்கான வாகன பிரச்சார பயணம் பல்வேறு அமைப்பினர் கொடியை சேர்த்து துவக்கி வைத்தனர்.


திருச்சி, பிப்,20:                                ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இஸ்லாமிய இயக்கத்தின் உறுதிமிக்க போராட்டத்தின் 75ஆண்டுகள் பரப்புரை இயக்கத்தின் ஒருபகுதியாக சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின்  சமூக


ஒற்றுமைக்கான வாகன பிரச்சார நிகழ்ச்சி இன்று பாலக்கரை ரவுண்டானாவில் தொடங்கிது. இந்தப் பிரச்சார நிகழ்ச்சி திண்டுக்கல் ,தேனி கம்பம், மதுரை,விருதுநகர் கரூர்,திருப்பூர் வழியாக கோவையில் மார்ச் 5-ந் தேதி இந்த பிரச்சாரம் முடிவடைகிறது. 

சமூக முன்னேற்றத்தின் அடிப்படையாக விளங்கும் 'சமூக ஒற்றுமை தலைத் தோங்குவதை இலட்சியமாக கொண்டு இந்தவாகன பிரச்சார நிகழ்ச்சி நடைபெறுகிறது. 


இளைஞர்கள் மத்தியில் மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்கள் நம்சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பங்களிப்பை ஆற்றுவதற்கான உத்வேகத்தை இந்த வாகன பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்தப் பிரச்சார வாகனத்தை சாலிடேரியில் இளைஞர் அமைப்பின் மாநில தலைவர் அப்துல் ஹக்கீம், புனித மரியன்னை பேராலயத்தின் அதிபர் அருட்தந்தை சகாயராஜ், என்.ஆர்.எஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி தலைவர் விஜயபாலன் ஆகியோர் கொடி அசைத்து பிரச்சார பயணத்தை தொடங்கி வைத்தனர்


இந்நிகழ்வின் போது இளைஞர்அமைப்பு மாநில செயலாளர் கமாலுதீன், திருச்சி மாநகர தலைவர் முனைவர் ஹஜ்மைதீன் திருச்சி மக்கள் சேவை அமைப்பின் பொறுப்பாளர் நவாஸ்கான் உட்பட பல கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form