பிளாஸ்டிக் பைகளின் தீமைகள் விழிப்புணர்வு

 


சென்னை, பிப் 20:                                   அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கொளரவ தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான நீதியரசர் எம். கற்பகவிநாயகம் வழிகாட்டுதலின்படி 


சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில்  அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதிப்புகள்  பிளாஸ்டிக் பைகளில் நாம் வாங்கும் உண்ணும்  உணவு பொருட்களால் குழந்தைகள் முதல்   பெரியவர்கள் வரை  எப்படி உடல் நிலை பாதிப்படைகிறார்கள் 


நாம்  பயன்படுத்தியபிறகு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளால் நீர் நிலைகள் விவசாய நிலம் குடிநீர்  எப்படி பாதிக்கிறது இதனால் சுற்றுச்சூழல் மாசடைந்து மனிதகுலம் முதல் விலங்குகள் பறவைகள் வரை அனைத்து உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகின்ற எனவே நாம் மக்காமல் இருகின்ற பிளஸ்டிக்  பைகளை தவிர்த்து மக்கும் வகையிளான பைகளை பயன்படுத்தி நம்மையும் நம் குழந்தைகளையும் விளங்கு மற்றும் பறவைகளையும் பாதுகாக்க வேண்டும் 


என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு  துண்டறிக்கை மற்றும் மக்கும் வகையிலான பைகளை வழங்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது,

இந்நிகழ்வில் தமிழ் பூங்கொடி  சித்ரா கிருஷ் பார்த்திபன் வினோத் பிரபு வழக்கறிஞர் முருகன் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மக்கும் வகையிலான பைகள் மற்றும் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கினர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form