திருச்சி,ஜன,17:தமிழ்நாட்டில் நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்து வரும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்களின் ஆட்சி தமிழகத்தில் அமைந்தவுடன் பள்ளிவாசல்கள் தர்க்காக்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீராக்கி செம்மையாக்கிட கடந்த அதிமுக ஆட்சியில் அறிவித்த 5 கோடி ரூபாயை ஒரு கோடி ரூபாய் அதிகரித்து 6 கோடியாக அறிவித்தவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்.
அதேபோல சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்திற்க்கு இரண்டு அமைச்சர்களை நியமித்து இஸ்லாமிய மக்களுக்கு கண்ணியம் தந்தவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இதைதொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா அவர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிவாசல் தர்காக்களில் உள்ள பழுதுகளை சீராக்க ஒதுக்கப்பட்ட நிதியை 6 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளதை முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் வரவேற்க்கிறேன்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக முன்னேற்றி மதச்சார்பற்ற மாநிலமாக இந்து முஸ்லீம் கிருஸ்தவர்களுக்கு பாதுகாப்பு அரணாக ஆட்சி நடத்தி வரும் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் இடிமுரசு இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.