திருச்சி, ஜன ,14: திருச்சி புத்துரில் உள்ள ஒய்.எம்.சி.எ. மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கவுன்சிலர் ரெக்ஸ்,தலைமை வகித்தார்,பள்ளியின் சேர்மன் மார்டின், தலைமையாசிரியை ஷீலா செலஸ், ஆசிரியைகள் சுதா, சுமதி, ஸ்வீட்டி, கிருத்திகா, சித்ரா, எழிலரசி, புனிதா ராஜகுமாரி மற்றும் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு,பொங்கல் சமைத்து மற்றும் அனைவருக்கும் பொங்கல் இனிப்புகள் வழங்கி பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து அன்பை பரிமாறிக் கொண்டனர்