பொங்கல் தொகுப்பிற்கு தமிழக அரசு கரும்பு விவசாயிகளிடம் வாங்கி வழங்க வேண்டும் - இல்லையென்றால் தலைமைச் செயலகம் முன்பு நிர்வாணமாக ஓடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் - தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு எச்சரிக்கை
திருச்சி,டிசம்பர்,26: திருச்சி மாவட்ட ஆட்சிய அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டனர்.
இந்த முற்றுகை போராட்டத்தின் போது மத்திய அரசு கரும்பு விலை ரூபாய்8100 தருவதாக கூறியது. தற்போது 2,900 மட்டுமே வழங்கி வருகிறது. எனவே மத்திய மோடி அரசின் வழியாக கரும்புக்கான விலையை உயர்த்தி வழங்க வேண்டும், மேலும் தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கி வருகிறது. இம்முறை தமிழக அரசு கரும்பு அறிவிக்கவில்லை உடனடியாக தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு விவசாயிகளிடம் கரும்பு பெற்று வழங்க வேண்டும் இல்லை என்றால் தலைமைச் செயலகம் முன்பு நிர்வாணமாக ஓடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.