பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாஜக விவசாயி அணி சார்பில் ஆர்ப்பாட்டம்.
திருச்சி,டிச,26: பொங்கல் தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் வழங்காத திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக
திருச்சியில் பா.ஜ.க விவசாய அணி மாநகர், மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம். நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், புறநகர் மாவட்ட விவசாய அணி தலைவர் சசிக்குமார், மாநில விவசாய அணி துணை தலைவர் கோவிந்தராஜன், வரகனேரி பார்த்திபன்,முன்னாள் மாவட்ட தலைவர் திருமலை உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கையில் கரும்பை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

