திருவையாறு அரசர் கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு
திருவையாறு, டிச,28:
திருவையாறு அரசர் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் பயின்ற தமிழ் துறை மாணவ மாணவிகள் சந்தித்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்ட நெகிழ்ச்சியான நிகழ்வு இன்று நடைபெற்றது
திருவையாறு அரசர் கல்லூரியின் முதல்வர் முனைவர் ரவிச்சந்திரன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடிய மாணவ மாணவிகள்கள் தங்களுடைய கல்லூரி காலத்தை பற்றிய நினைவுகளை பரிமாறிக் கொண்டதோடு, தான் படித்த காலத்தில் தம்மோடு படித்த முன்னாள் மாணவராகிய முனைவர் ரவிச்சந்திரன் அவர்கள் தற்போது இக்கல்லூரியின் முதல்வராக இருக்கும் தருணத்தையும் பெருமையாக கூறினர்
மேலும் திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தற்போது பணி புரியும் ஒவ்வொருவரும் தனித்துவமிக்க சக்தியாக ஒவ்வொரு நிறுவனத்திலும் முதலிடத்தில் இருப்பதைப் பெருமையாக எடுத்து கூறினர்
புலனக் குழுவின் வழியே ஒன்றிணைந்த இம்மாணவ மாணவிகளின் வேண்டுகோளின் படி கல்லூரி முதல்வரின் தலைமையில் முன்னாள் மாணவர் சங்கமும் ஆரம்பிக்கப்பட்டது
இச்சங்கத்தில் பல்வேறு காலகட்டங்களில் பயின்ற அனைத்து அரசர்கல்லூரி மாணவர்களையும் இணைத்து வருகிற மே மாதத்தில் சிறப்பாக நடத்தவிருக்கின்ற முதல் மாணவர் சந்திப்பு விழாவில் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்கள் ஆசிரியர்களைக் கௌரவிக்கவும்
கல்லூரியில் இறுதியாண்டில் படிக்கும் மாணவர்கள் அனைவரையும் இச்சங்கத்தில் சேர்க்கவும்
ஒவ்வொரு ஆண்டும் இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கௌரவிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தமிழகத்தின் மிகப் பழமையான கல்லூரி ஆகிய அரசர் கல்லூரியின் பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் போட்டிகள் நடத்தி பரிசு தரவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அச்சங்கத்தின் முறையாக பதிவு செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மாணவ மாணவிகள் தாம் பயின்ற வகுப்பறைகளில் சென்று அமர்ந்தும் தாங்கள் தங்கியிருந்த மாணவியர் விடுதிக்குச் சென்று பார்வையிட்டும் மகிழ்ந்தார்கள்