திருச்சியில் நூறு வகையான மரக்கன்றுகளின் கண்காட்சி. சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்,
திருச்சி, அக், 17: கன்மலை அறக்கட்டளை சார்பில் வனம் தன்னார்வ அமைப்பின் நம்ம மரங்கள் திருவிழா 100 வகையான நாட்டு மரக்கன்றுகள் கண்காட்சி திருச்சி புனித ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 15,16 சனி மற்றும் ஞாயிறு இரண்டு தினங்கள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சகாய ஹெலன் வரவேற்புரை வழங்கினார். இக்கண்காட்சியை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.த. இனிகோ இருதயராஜ் ,திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மண்டலம் 2-ன் தலைவர்.பி. ஜெயநிர்மலா,அருட்தந்தை யூஜின் , முனைவர் ஐவன் மதுரம், வனம் கலைமணி, ஜான் பிரபு, ஜான் பிராங்கிளின், ஜோஸ்வா விக்டர், ஆடிட்டர் ராய் ஜான் தாமஸ், பனானா லீப் மனோகரன், சதீஷ்குமார், சிவசுந்தரி போஸ். பிரான்சிஸ் சேவியர், சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில்,கன்மலை அறக்கட்டளையின் நிறுவனர் வில்பர்ட் எடிசன் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை செய்திருந்தார். சுபக்குமார் நன்றியுரையாற்றினார்.
மரகண்காட்சியில் பழந்தமிழர்கள் போற்றி பாதுகாத்து வந்த பாரம்பரியமிக்க மருத்துவ குணம் வாய்ந்த கடுக்காய், சாதிக்காய், குங்குமம் அத்திக்காய், புரசு, வன்னி போன்ற 100 வகையான நாட்டு மரக்கன்று வகைகளை இன்றைய தலைமுறையினர் குறிப்பாக மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்திடும் வண்ணம் காட்சி படுத்தப்பட்டுபொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது,பொதுமக்கள் யாராலும் மரங்கள் பயன்கள் குறித்து கேட்டறிந்து பயன் பெற்றனர்,