திருச்சி, அக், 18: 2022 ம் ஆண்டு அக்டோபர் திங்கள் பத்தாம் நாள்உலக மனநல தினத்தை முன்னிட்டு மற்றும் வீடு அற்றோர் தினத்தை கொண்டாடும் விதமாக, திருச்சிராப்பள்ளி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூக பணித்துறையும் பேனியன் தொண்டு நிறுவனமும் இணைந்து முப்பெரும் விழா நடைபெற்றது,
விழவின் நிகழ்வாக திருச்சி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு வீடற்றவர்களாக சாலைகளில் சுற்றித் திரியும் ஆதரவற்றோர்களுக்கான சேவை செய்வதில் சிறந்து விளங்கக்கூடிய தொண்டு நிறுவனங்களை பாராட்டினர்,
அவ்வகையில் அன்பாலயம், ஸ்ரீ தொண்டு நிறுவனம், கங்காரு கருணை இல்லம், ட்ரீம் இந்தியா நெட்வொர்க், பேனியன் தொண்டு நிறுவனம், சாந்திவனம், வேலா கருணை இல்லம், குணசீலத்தில் இயங்கி வரக்கூடிய மறுவாழ்வு மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான பாதுகாப்பு மையம் போன்ற தொண்டு நிறுவனங்கள் கௌரவப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில டாக்டர் பிடி கிருஷ்ணமூர்த்தி - மனநல மருத்துவர், மாவட்ட மனநல திட்ட அதிகாரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடைய தொண்டினை பாராட்டும் விதமாக அவருக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் ம. பிச்சைமணி மற்றும் கலைப்புல முதன்மைர் முனைவர் லட்சுமி ஆகியோர் கேடயம் வழங்கி சிறப்பித்தனர்,
டாக்டர் கிருஷ்ணமூர்த்தி மேலே குறிப்பிட்ட எட்டு தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்களை தன் கரங்களால் சிறப்பித்தார். இரண்டாவதாக, இந்த முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட தொண்டு நிறுவனங்களிடம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மூன்றாவது பகுதியாக, மனநலம் பாதித்தோர் மறுவாழ்வு மையங்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்திலேயே முதன் முறையாக ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த மையங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மாதம் இருமுறை விற்பனை செய்ய விற்பனையகம் தொடங்கப்பட்டது.