தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் அங்கத்தினருக்கு அழைப்பு தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் ஆலோசனை கூட்டம் 25.9.22ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு பள்ளிபாளையத்தில் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் ரகுபதி தலைமையில்நடைபெறஉள்ளது,
இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் மாநில மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்வரும் டிசம்பர் 10 மனித உரிமைகள் தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்க உள்ளோம்.
மேலும் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு மத்திய அரசு வழங்குகிற நலத்திட்டங்களை வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.
எனவே பொறுப்பாளர்கள் காலதாமதமின்றி குறித்த நேரத்திற்கு கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி கூட்டத்தினை சிறப்பிக்கவேண்டுகிறோம்
இப்படிக்கு மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ஆர்.டி.இளங்கோ,