அலைகள் பெண்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

 திருச்சி,செப், 23:                                       திருச்சி மாநகராட்சி  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் மீது பெண்கள் கூட்டமைப்பினர் புகார் - 50க்கு மேற்பட்ட பெண்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு


திருச்சி மாநகராட்சி 17வது வார்டில் அலைகள் பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 22வருடமாக அப்பகுதியில் உள்ள கழிப்பிடங்கள் பராமரிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது 17வார்டில் மாமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் அங்கு பராமரிக்கப்படும் அனைத்து கழிவறைகளையும் நாங்கள் எங்கள் கட்சி ஆட்களைக் கொண்டு பராமரிக்க உள்ளோம். எனவே, அனைவரும் வெளியேறுங்கள் என்று சொல்லி மாநகராட்சி அதிகாரிகள் மூலம் தொடர்ந்து எங்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தி வருவதுடன் அங்கு பணியில் உள்ள பெண்களிடமும் தேவையற்ற முறையில் சண்டையிட்டு வருகின்றனர். எனவே, உடனடியாக இது குறித்து தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அதிகாரிகளிடம்  இடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.


இதனை தொடர்ந்து இன்று மதியம் அலைகள் பெண்கள் அமைப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் பொருளாளர் ருக்மணி ,தலைவி இலஞ்சியம், செயலாளர் ஆஷா  ஆகியோர் தலைமையில் திடீரென கீழபுலிவார்டு சாலையில் குவிந்து மறியலில் ஈடுபட முயன்றனர். இதன் காரணமாக பகுதியில் திடீர்  பரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் தயாளன் மற்றும் காவல் துறை சம்பவ இடத்துக்கு சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். 

Post a Comment

Previous Post Next Post

Contact Form