திருச்சி,செப், 23: திருச்சி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தேவேந்திர குல வேளாளர் பேரமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்டம், திருவரம்பூர் பகுதியில் உள்ள நொச்சி வயல் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வித்யாவை நான்கு வாலிபர்கள் விஷம்கலந்த குளிர் பானத்தை கொடுத்து கொலை செய்ததாக வழக்கு பதியப்பட்டு இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள மற்ற குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பு மாணவி கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி தேவேந்திர குல பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சங்கர் தலைமையில் நிர்வாகி ஐயப்பன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் விரைவில் குற்றவாளிகளை கைது செய்யப்படவில்லை என்றால் தேவேந்திர குல மக்களை ஒன்று திரட்டி பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தனர்.