தொடரும் தெரு நாய்கள் தொல்லை நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி

 

திருச்சி, செப்,26:                          திருச்சியில் பல்வேறு பகுதிகளில் நாய்கள் தொல்லைகள் அதிகரித்து வருகின்றது, இது சம்பந்தமாக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் நாய்களை பிடித்துச் செல்வதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


மேலும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் தெருக்களிலும் சாலைகளிலும் திரிந்து வருகிறது,

இன்று 16வது வார்டு உக்கடை அரியமங்கலம் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரை தெரு நாய் அவரின் கையை கடித்து கொதறி உள்ளது பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி காட்டூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் காண்பித்து ஊசி மட்டும் போட்டுவிட்டு  அடுத்து மேல் சிகிச்சைக்காக துவாக்குடி மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர் இதைத் தொடர்ந்து அந்த மூதாட்டி துவாக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார்

தொடரும்  நாய்கள் தொல்லையில் இருந்துபொதுமக்கள் பாதுகாக்கப்படுவார்களா?                      என பொதுமக்கள் எதிர் வருகின்றனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form