ஒருங்கிணைந்த குழந்தைகள் மையத்தில் தோண்டப்பட்ட குழிகள் முடப்படுமா?
திருச்சி,செப்,26: 28.வது வட்ட தென்னூர் புதுமாரியம்மன் கோவில்தெருவில் உள்ளஒருங்கிணைந்த குழந்தைகள் மையத்தில் தேண்டப்பட்ட குழிகளை மூட நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாநகர மாவட்ட மகளிர் பாசறை இணைச்செயலாளர் கிரிசா தலைமையில் மனு அளித்தனர்,
கழிவு நீர் வடிகால் சுத்தம் செய்யப்படாமல் நிரம்பி தேங்கி உள்ளது,
தொட்டிகளில் தண்ணீர் வருவதில்லை.
மேலும் அப்பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மையத்தில் கட்டிடம் கட்டுவதற்க்காக தோண்டப்பட்ட 5.அடி குழியில் மழைநீர் நிரம்பி உள்ளதால்
குழந்தைகள் வெட்டப்பட்டுள்ள குழிகளில் விழும் அபாயம் உள்ளது, உயிருக்கு பெரும் ஆபத்தாக உள்ள இந்த குழிகளை உடனடியா மூடுவதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
மேலும் நேற்று இரவு
இதனால்குழந்தைகள் மையத்திற்கு இன்று (26.09.22) விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது, சம்மந்தபட்ட அதிகாரிகள்
உடனே கட்டிடப் பணிகளை முடுக்கி விட்டு 5 அடி ஆழ அஸ்திவாரக் குழிகளை மூடவும், குப்பைகளை தினமும்
வாங்கவும், கழிவுநீர் வடிகாலை தினமும் சுத்தம் செய்யவும், புதிதாக கழிவுநீர் வடிகால் அமைத்துத் தரவும், தினமும்
தண்ணீர் தொட்டிகளில் நீர் வரவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு
உத்திரவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்,