சபரி மாலா என்கிற பாத்திமாவின் 36 வது வயதினிலே புத்தகம் வெளியிடப்பட்டது,
திருச்சி, செப்,27: தன்னம்பிக்கை பேச்சாளரும் ஆசிரியருமான சபரிமாலா ஜெயகாந்தன் சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்றார்,
சபரிமாலா அழகர்சாமி.கலையரசிக்கு 1982 டிசம்பர் 26 ஆம் தேதி மதுரையில் பிறந்தார்,ஜெயகாந்தன் என்பவரை மணந்து ஜெயசோழன் என்ற மகனும் உண்டு
இவர் பல்வேறு தன்னம்பிக்கை பேச்சுக்களால் சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்தி உள்ளார்,
மேலும் தமிழகத்தில் நீட் தேர்வு எதிராக குரல் கொடுத்து பல்வேறு மேடைகளில் பேசியுள்ளார்,
இந்நிலையில்இவர் இஸ்லாத்தை அறிந்து பாத்திமா சபரி மாலாவாக ஹஜ் உம்ரா என்ற புனித பயணத்தில் 36 வயதினிலே என்ற நூல் வெளியிட்டுள்ளார்,
அதில் தான் 36வயதினில் இஸ்லாத்தை ஏற்றதால் அந்த நூல் தலைப்பு 36 வது வயதினிலே என்ற தலைப்பில் ஈமானில் பெண் விடுதலை பற்றி எழுதி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இறைவனின் சன்னதியான காபத்துல்லாவில் இருந்து இந்த நூலை வெளியிடுவதில் பெருமை கொள்வதாகவும் கூறியுள்ளார்,

