இந்தியாவின் இருள் அகற்றுவோம். மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் தெருமுனை பிரச்சாரம்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் நடைபெற்ற அகில இந்திய பிரச்சார இயக்கத்தின் ஒருபகுதியாக திருச்சி மலைக்கோட்டை பகுதிக்குழு சார்பில் சத்திரம் பேருந்து நிலையம், இ.பி.ரோடு, தாராநல்லூர்,பெரியகடைவீதி, சின்னக்கடைவீதி, ஆண்டாள்வீதி, சத்துக்கடைஉள்ளிட்ட பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் செயலாளர் ராமர் தலைமை வகித்தார்,சிபிஎம் மாநிலக்குழ உறுப்பினர் ஸ்ரீதர் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா மாவட்ட குழஉறுப்பினர் அண்வர்,ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில் ஒன்றிய அரசு பிரதமர் மோடி ஆட்சியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட விலை உயர்வை கட்டுப்படுத்தாத ஒன்றிய மோடி அரசுக்கு முடிவு கட்ட வேண்டும்,மோடி ஆட்சியும் மோடியையும் அகற்ற வேண்டும், எல்லோருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம்,ஜனநாயகம்,சமத்துவம் உண்டாக்க வேண்டும்..என வலியுறுத்தி பேசினர்
இதில்,சிபிஎம் மலைக்கோட்டை பகுதி குழ ரமேஷ், அப்துல்பஷீர், கனகராஜ், தரைக்கடை மணிகண்டன், முருகன் கிளைசெயலாளர்கள் சமர்சிங், இளங்கோ, தக்காளிசெந்தில், தக்காளிபாரதி, ஷாஜகான், கோபால், ராமச்சந்திரன், ரேணுகா, இளங்குமரன், சபரி,நாகப்பபழனி உள்படபலர்கலந்துகொண்டனர்