திருச்சியில் நடைபெற்ற உணவு பாதுகாப்பு திருவிழாவில் சிறந்த குறும்பட போட்டியில் முதல் பரிசை பெற்ற என் கடமை குறும்பட குழுவினர்க்கு கோவையில் பாராட்டு
கோவை, ஆகஸ்ட், 29: அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் மாநில தலைவரும் முன்னாள் சிபிஐ அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரும் ரோட்டரி கவர்னருமான சுந்தர வடிவேலு அவர்களின் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது இந்நிகழ்வில் மேனாள் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியும் மேனாள் நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவருமான பாலசந்திரன் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர். கே. குமார் உள்ளிட்டோர் என் கடமை குறும்படத்தை பார்த்து படகுழுவினரின் முயற்ச்சிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்
மேலும் இது போன்ற பல சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வு படைப்புகளை எதிர்காலத்தில் எடுக்க பட குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் மேலும் திருச்சி மாவட்டத்தில் அமைப்பின் சார்பில் பல்வேறு சமூக நல பணிகளை செய்து வரும் அமைப்பினருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர் சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அமைப்பின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் எதிர்கால கள பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது
இந்நிகழ்வில் என் கடமை படத்தின் இயக்குனரும் அமைப்பின் திருப்பூர் மாவட்ட செயலாளருமான குமார் தங்கவேல் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர. ஏ. தாமஸ் ஒளிப்பதிவாளர் யாசின் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.