திருச்சி, ஜூலை, 24:
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி அலுவலகம் திறப்பு விழா
திருச்சி பாலக்கரை அருகே வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது,
இதில்,திருச்சி மாவட்ட தலைவர் சிராஜ்தீன்தலைமை வகித்தார்,மாநில தலைவர் அதிகுர் ரஹ்மான் கட்சியின் கொடியை ஏற்றி சிறப்பித்தார்,
இனைச் செயலாளர் காஜா மொய்தீன் கட்சியின் திருச்சி மாவட்ட அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்,
திருப்பதி ஸ்டீல் திருப்பதி,வழக்கறிஞர் ஆனந்த் குமார்,மதுரை மாவட்ட தலைவர் ஹிதாயத்துல்லாஹ்ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்,
ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்து அமைப்பின் மாநகர தலைவர் ஹஜ் மொய்தீன், வெல்ஃபர் கட்சியின் நிர்வாகிகள் மாநிலத் துணைத் தலைவர் கவி மணிமாறன், பொதுச் செயலாளர் முகமது காசிம், பொருளாளர் ஹாஜா கனி, செயலாளர்கள் சாதிக், ஜெய்லானிஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்,
மாவட்டச் செயலாளர்காஜா மொய்தின் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்,இதை வெல்பர் கட்சி மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்து நிர்வாகிகள்
உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்,
நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொருளாளர் முகமது யாசின் நன்றி கூறினார்,