மின்கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு,சட்டம் ஒழுங்கு சீர்கேடு,தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து,
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் வரும் 25ம் தேதி காலை 10.00 மணி அளவில் முசிறியில் நடைபெறவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை
மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.
இதில் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி மாவட்ட அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு(எ) சுப்ரமணியன் மாவட்ட இணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ டி.இந்திராகாந்தி மாநில எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் பொன்.செல்வராஜ் மாவட்ட கழக பொருளாளர் சேவியர் மற்றும் ஒன்றிய,நகர,பகுதி,பேரூர் கழக செயலாளர்கள்,மாவட்ட சார்பு அணிச் செயலாளர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

