தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, இன்னர் வீல் கிளப் ஆப் திருச்சி மலைக்கோட்டை சார்பாக, தலைவர் கவிதா நாகராஜன் ஏற்பாட்டில், புத்தூர், வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள சி.இ. மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது,
இதில்,மாணவ, மாணவியர் அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, தேவையான மருத்துவ உதவிகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டது,
மருத்துவ முகாமில் கலந்து கொண்ட மருத்துவர்கள் டாகடர்.அக்க்ஷயா, டாக்டர்.அர்ச்சனா, டாக்டர்.சுதர்சனா ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்க பட்டது.
இந்த நிகழ்வில் 15-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.