மாணவர்களின் திறனை மேம்படுத்த ஸ்பெக்ட்ரம் 2022 கண்காட்சி

 



மாணவர்களின் வளர்ச்சியை மேம்படுத்த விஞ்ஞான வளர்ச்சி கண்காட்சி திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது,


மாணவர்களின் வளர்ச்சியை மேம்படுத்த விஞ்ஞான வளர்ச்சி கண்காட்சி திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது,


திருச்சி திருவரம்பூர் வேங்கூர் பகுதியில் உள்ளசெல்லம்மாள் வித்யாலயா பள்ளியில் ஸ்பெக்ட்ரம் சிவிடி 2022கண்காட்சி, என்.ஐ.டி.ஆங்கிலத் துறை பேராசிரியர் டாக்டர் சத்யராஜ் வெங்கடேசன், மின் மற்றும் மன்னனுவியல்துறை பேராசிரியர் டாக்டர் சரவணன் இளங்கோ ஆகியோர் தலைமையில் நடைபெற்றது,

 


இந்த கண்காட்சி பள்ளியின் தாளாளர் டாக்டர் ராமமூர்த்தி நல்லாசியுடன் பள்ளியின் செயலாளர் செந்தூர் செல்வன் மற்றும் பள்ளியின் முதல்வர் உஷா குமாரசுவாமி ஆகியோர் முன்னிலையில்அனைத்து பாடப்பிரிவுகளையும் ஒருங்கிணைத்து பல்வேறு தலைப்புகளில் கண்காட்சி மையம் அமைக்கப்பட்டிருந்தது 


இதில் கணிதம் விஞ்ஞானம் வரலாறு புவியியல் தொழில்நுட்பம் மொழிகள் விளையாட்டு பொது அறிவு என அனைத்து பாடப்பிரிவுகளையும் ஒருங்கிணைந்து ஆங்கில எழுத்துக்களான A முதல் Zவரை உள்ள எழுத்துக்களில் துவங்கும் வார்த்தைகளை வைத்து ஒரு ஆராய்ச்சியை நிகழ்த்தி அதன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்

மேலும் விமானங்களின் வடிவமைப்பு தண்டியாத்திரை செயல்பாடு தாவர விதைகள் முளைக்கும் முறைகளில் விளக்கம் முதல் உதவி முதல் உதவி பல்வேறு நாடுகளின் பாராளுமன்றத்தின் மாதிரிகள் ஈபில் டவர் டைனோசரின் மாதிரிமற்றும் அதன் வரலாறு நீரின் மூலம் மின்சாரம் தயார் செய்தல் கங்கைநதி சிறப்பு அதன் கலாச்சாரம் பொருளாதார பின்னணி கிராமப்புற மக்களின் வாழ்க்கை நோய்க்கிருமிகள் உருமாறும் விதம் மற்றும் பாட்டு மெல்லிசை நடனம் உள்ளிட்ட அனைத்து விதமான மாணவர்களின் செயல் திறமையை இந்த கண்காட்சியின் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர்



இந்த கண்காட்சியை மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் கண்டுகளித்தனர்



Post a Comment

Previous Post Next Post

Contact Form