திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்

 திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது


உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகர பகுதி யில் போட்டியிடும்  திமுக  தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைக்கோட்டை பகுதி குழு சார்பில்  தாராநல்லூர் கீரைக் கடை பகுதியில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. 



இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைக்கோட்டை பகுதி செயலாளர் ராமர் தலைமை வகித்தார்,


திமுக சார்பில் 16வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் எம்.மதிவாணன், 18வது வார்டில் போட்டியிடும் டி. சண்முகப்பிரியா, மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் 17 வது வார்டில் போட்டியிடும்  வேட்பாளர் ந.பிரபாகரன் ஆகியோரை அறிமுகப்படுத்தி மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் பேசுகையில்  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நமது வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறினர்


கூட்டத்தில் சுமைப்பணி தொழிற்சங்க சங்க மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், குமார், செந்தில், சின்னதுரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form