கலப்பட தேயிலை தூள் , காலாவதியான குளிர்பானங்கள் ஆகியவை பறிமுதல்.
திருச்சியில் உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திருச்சி மாநகர பகுதியில் சுமார் 17 தேநீர் கடைகளை ஆய்வு செய்ததில் சுமார் 8 கடைகளில் சந்தேகத்திற்கு இடமான சுமார் 9 கிலோ கலப்பட தேயிலை தூள் கண்டறியப்பட்டு வழக்கு போடுவதற்காக சுமார் 8 சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுபாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு அபராத தொகையாக ரூபாய்.15,000/- இரண்டு கடைகளுக்கு விதிக்கப்பட்டது.
அதைபோல் காலாவதியான குளிர்பானங்கள் சுமார் 11 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டு
மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் பொதுமக்களும் உணவு வணிகர்களும் இது போன்று கலப்பட தேயிலை தூளை விற்பனை செய்யக்கூடாது என்று கூறினார்.
இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின், பாண்டி, அன்புச்செல்வன், இப்ராஹிம், வசந்தன், மகாதேவன் மற்றும் பொன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.