மறைந்த முன்னால் முதல்வார் எம்.ஜி.ஆர்.ன் 105வது பிறந்த நாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது,
மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த தின விழ ஜன, 17ம் தேதி நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட புறநகர் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி சோமரசம்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கு புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி, முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், கே.கே.பாலசுப்ரமணியன், எஸ்.வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து, மரியதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சோமரசம்பேட்டை ஒன்றிய செயலாளர் ஜெயகுமார், மாவட்ட, நகர, பேரூர், பகுதி, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.