மத நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக செயல்படும் சகோதரரின் மணிமகுடத்தில் இது மேலும் ஒரு வைரக்கல்!..
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை ஜாஃபர் அலி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த 'கோட்டை அமீர்' அவர்களின் பெயரால் "கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்" ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில்
தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாய் திகழ்பவர்களுக்கு கோட்டை அமீர் விருது குடியரசு தின விழாவில் வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் 2022 இந்த வருடத்திற்கான கோட்டை அமீர் விருது கோயம்புத்தூரைச் சேர்ந்த அன்பு சகோதரர் முகமது ரபி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத நல்லிணக்கமும், சகோதர சமுதாயத்தை அரவணைக்கும் போக்கும் அதிகம் கொண்ட சகோதரர் முஹம்மது ரபீக் அவர்களின் மத மாச்சரியங்களை கடந்த சேவையும், மக்களை பக்குவப்படுத்தும் விதமாய் செய்யும் மனிதநேய பணிகளும் அவர் இந்த விருதுக்கு தகுதியானவர் என நிரூபணமாகியுள்ளது
கொரோனோ பெருந்தொற்று காலகட்டத்தில் அவர் செய்த அளப்பரிய பணிகளும், ஏழை-எளிய மக்களின் மீது அவர் காட்டிய மனிதநேயமிக்க மாண்புகளும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நிகழ்வாக அமைந்திருந்தது.
தமிழக அரசின் கோட்டை அமீர் விருது என்பது மனிதநேய பணிகள் செய்யும் சகோதரரின் மணி மகுடத்தில் இது மற்றுமொரு வைரக்கல் என்றால் அது மிகையில்லை.
அன்பு சகோதரர் முஹம்மது ரஃபி அவர்கள் மேலும் பல பதக்கங்களும் விருதுகளும் பெற்று மத நல்லிணக்கத்துக்கு முன்னுதாரணமாய் திகழவும் அவரின் பணிகளை இறைவன் பொருந்திக் கொள்ளவும் நாங்கள் மனதார பிரார்த்தனை செய்கிறோம். வாழ்த்துக்களுடன்
ஜாபர் அலி ,.மாநிலச் செயலாளர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம்