திருச்சி அரியமங்கலம் பால்பண்ணையில், பாஜக வினர் சாலை மறியல்

 



தஞ்சாவூரில் விஷ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், திருக்காட்டுப்பள்ளியில் மதமாற்றம் செய்யப்பட்ட சிறுமி இறந்ததற்கு கண்டனம் தெரிவித்து சாலைமறியல்












தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த மாணவி லாவண்யா என்பவர் மதமாற்றம் செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 


மாணவியின் படுகொலைக்கு நியாயம் கேட்டு தஞ்சாவூரில் போராடிய இந்து  அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.இதில் விசுவ இந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன் கைது செய்யப்பட்டார்.


இந்நிலையில் காவல்துறை, மற்றும் திமுக அரசை கண்டித்து, திருச்சி அரியமங்கலம் பால்பண்ணையில் பிஜேபி மற்றும் இந்து அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட டு திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.


இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர் இச்சம்பவத்தால் திருச்சி-சென்னை புறவழிச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form