அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் விழாவில் சிறந்த சமூக சேவைக்கான விருதுகள் வழங்கப்பட்டது.
டாக்டர் பீ.ஆர். அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தேசிய இளையோர் வார விழா, தமிழர் திருநாள், திருவள்ளுவர் தினம். முப்பெறும் நிகழ்ச்சி திருச்சி சங்கரன்பிள்ளை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் சுருதி, தலைமையில் நடைபெற்ற
விழாவில் நேரு யுவ கேந்திரா கணக்காளர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார்,சிறப்பு விருத்தினர்களாக கோட்டை காவல் நிலையம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன்,
வழக்கறிஞர் சற்குருநாதன், ரோட்ரி கிளப் கோபி, ஜெட்லி புக் ஆஃப் ரெக்காட்ஸ் ஜெட்லீ, கன்மலை அறக்கட்டளை வில்பர்ட் எடிசன், ஆகியோர் கலந்துகொண்டனர்
விழாவில் 30க்கும் மேற்பட்ட சிறந்த சமூக சேவைக்கான அம்பேத்கார் விருது வழங்கி சிறப்பித்தனர்
விழாவின் முடிவில் ஜான்சிராணி மகளிர் மன்ற நிறுவனர் ஹேமலதா நன்றி கூறினார்.