தமிழக முதல்வரை பாராட்டிய லண்டன் வாழ் தமிழர்கள்

 


முல்லை பெரியார் அனையை கட்டிய     கர்னல் ஜான் பென்னிக்விக்கு  சிலை அமைக்க அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வரை பாரட்டிய லண்டன் வாழ் தமிழர்கள் மற்றும் மாற்றம் அமைப்பினர்


திருச்சி, ஜன.17: தமிழகத்தில்  விவசாயிகள் பொதுமக்கள் என அனைவரும் பயன் பெற்று வரும் முல்லை பெரியார் அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிக்விக் நினைவாக சிலை நிறுவ பல்வேறு சமூக அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் விரும்பிய ஆசையை நிறைவேற்றும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முல்லை பெரியார் அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிக்விக் சிலையை தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் உள்ள கேம்பர்லி நகரில். நிறுவப்படும் என்ற அறிவிப்பையடுத்து,



அந்த சிலையை நிறுவ கர்னல் ஜான் பென்னிக்விக் கல்லறையை நிர்வகிக்கும் தம்பி தேனிசந்தனபீரொலி,செயின்ட்பீட்டர்ஸ்,


தேவாலய நிர்வாகிகள் ஷேரோன் பில்லிங், சூசன் ஃபெரோ. ஆகியயோர் முயற்ச்சியை பாரட்டும் விதமாக  லண்டன் பொதுமக்கள் சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் பொன்னாடை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது,


அவர்களது முயற்சிக்கு உறுதுணையாக நின்ற லண்டனில் வசித்து வரும் செந்தில்குமருக்கும் அவர்களின் குழுவினருக்கும் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. 



வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கும் லண்டனில் அனுமதி பெற நடவடிக்கை எடுத்த குழுவினர் அனைவருக்கும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ், சார்பிலும், மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள்


 தமிழக மக்கள் சார்பில் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர்.

1 Comments

Previous Post Next Post

Contact Form