திருச்சி விசுவாஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாமியாரை கொன்று விட்டு நாடகமாடிய மருமகள் கைது செய்யப்பட்டார்.
திருச்சி விசுவாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த ஆசிம்கான், வயது 28 இவரது மனைவி பெயர் ரேஷ்மா, இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில்
கடந்த 30/12/2021 அன்று மதியம் ஆசிம்கானின் தாயார் குழந்தைக்கு பால்காய்சயில் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு புடவையில் தீப்பற்றியதாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் மகன் ஆசிம் கான் கொடுத்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது,
இந்த வழக்கு குறித்து இச்சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக மாநகர காவல் ஆணையர் ஜி. கார்த்திகேயன், உண்மைத்தன்மையை அறிய புலன்விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார்
இதைத் தொடர்ந்து காந்தி மார்க்கெட் காவல் உதவி ஆணையர் தடவியல் அறிவியல் நிபுணர் குழு மற்றும் காவல் ஆய்வாளர் நேரடி விசாரணையில் சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது அங்கு ரத்தம் சிதறி கிடந்துள்ளது மேலும் இறந்தவர் மீது இரண்டு ஆயுதங்களால் தாக்கிய காயம் இருந்துள்ளது இதனால் மேலும் சந்தேகம் வலுவடைந்து விசாரணையை தீவிரப்படுத்தி மேற்கொண்டதில் மருமகள் ரேஷ்மா, என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரணை செய்தபோது
தான் கர்ப்பமாக இருந்த போது தனது மாமியார் கருவை கலைக்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும் ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் மீண்டும் ஒரு குழந்தை தேவையா என்று கூறி கருவை கலைக்கச் சொல்லி உள்ளதால்இதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் இருந்து கடுமையான வயிற்றுவலி உடல் உபாதைகள் தொந்தரவுகள் தொடர்ந்து இருந்து வந்ததால் இதனால் மாமியார் மீது கடுமையான கோபம் இருந்ததாகவும் சம்பவத்தன்று இஞ்சி இடிக்கும் குழவிக் கல் மற்றும் ஸ்க்குரு டிரைவர் ஆகிய ஆயுதத்தால் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்,
மேலும் திட்டமிட்டு செய்த கொலையை மறைப்பதற்காக நாடகமாடியதால் ரேஷ்மாவை கொலை வழக்கில் கைது செய்தனர்.
இச்சம்பவத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டை தெரிவித்துக் கொண்டார்