சற்றே குறைப்போம் மற்றும் உணவு கலப்பட பற்றிய விழிப்புணர்வு முகாம் மணப்பாறையில் நடைபெற்றது,
மணப்பாறையில் உள்ள அனைத்து உணவு வணிகர்களுக்கும் உணவு பாதுகாப்பு துறை சார்பாக தமிழக முதலமைச்சரின் சட்டமன்ற அறிவிப்பபான சற்றே குறைப்போம் (குறைந்த உப்பு, குறைந்த சர்க்கரை, குறைந்த கொழுப்பு - திட்டம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உணவு கலப்பட விழிப்புணர்வு முகாமும் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு திருச்சிராப்பள்ளி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றி பேசுகையில் உணவு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஓவொருவரும் வருங்காலங்களில் புற்றுநோய் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கும், ஆயுட்காலம் நீடித்து வாழ்வதற்கும் உணவு கலப்படங்கள் பற்றி தெரிந்துகொள்ள கொள்ள வேண்டும்,
மணப்பாறையில் உள்ள முறுக்கு உணவு வணிகர்கள் அனைவரும் தாங்கள் விற்பனை செய்கின்ற உணவு பொருட்களில் காலாவதி தேதி, தயாரிப்பு தேதி தயாரிப்பாளரின் முழுமுகவரியுடன் அச்சிட்டு விற்பனை செய்ய வேண்டும் என்றும், ஒருமுறை பயன்படுத்தும் எண்ணெயை உணவு பாதுகாப்பு துறை ஆணையம் அறிமுகப்படுத்திய RUCO (Reused Purposed Cooking Oil) திட்டத்தின் கீழ் 1 லிட்டர் ரூ.30 கொடுத்து பயன்பெறவும் கேட்டுக்கொண்டார்.
உணவு வணிகர்கள் அனைவரும் பதிவு/உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்றும், பதிவு என்றால் ஆண்டுக்கு ரூ.100/- மட்டும் உரிமம் என்றால் ஆண்டுக்கு ரூ.2000/ மட்டும் செலுத்தியும் ஆன்லைனில் பதிவு செய்வோருக்கு இ -சேவை கட்டணமாக பதிவுக்கு ரூ.60-வதும் உரிமத்திற்கு ரூ.150/- வரை மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், வேற எந்த தொகையும் உணவு பாதுகாப்பு துறைக்கோ உணவு பாதுகாப்பு துறை பெயரை கூறுபவர்களுக்கோ கொடுக்க கூடாது என்றும், இவ்வாறு பதியும் உணவு வணிகர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் பதிவு/உரிமம் சான்றிதழ் தங்களுடைய மின்னஞ்சல் அல்லது வாட்ஸ் ஆப் எண்ணிற்கோ வந்துவிடும் என்று தெரிவித்தார். அந்த சான்றிதழில் மாவட்ட நியமன அலுவலர் கையொப்பமோ, வேறு உணவு பாதுகாப்பு அலுவலர்களின் கையொப்பமோ தேவையில்லை என்றும் கூறினார்.
உணவு பாதுகாப்பு துறையின் நோக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தவிர தண்டிப்பதற்கு அல்ல என்பதையும் தெளிவுபடுத்தினார். மேலும், தங்களுக்கு விலை குறைந்த உணவு பொருளோ, எண்ணெய் வகைகளோ விற்பனை வந்தால் அதனை உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் ஆப் குழுமத்தில் இணைந்து சந்தேகத்தை தீர்த்துக்கொண்டு அந்த பொருளை விற்பனை செய்யலாம் என்றும் கூறப்பட்டது.
மேலும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், தொடர்ந்து விற்பனை செய்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இந்த கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் எங்கு காணப்பட்டாலும், வேறு எந்த உணவு பொருள்களில் கலப்படம் காணப்பட்டாலோ, கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார். தங்களின் புகார் ரகசியம் காக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
புகார் எண் :
99 44 95 95 95
95 85 95 95 95
மாநில புகார் எண் : 9444042322
டாக்டர்.R.ரமேஷ்பாபு மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, சார்பில் தெரிவித்து கொண்டனர்