எனக்கு தடுப்பூசி போட வேண்டாம் பயந்து மரத்தில் ஏறிய கிராமவாசி!

 

புதுச்சேரியில் அம்மாநில அரசு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற,  தீவிர முயற்சி எடுத்து வருகிறது.



புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கிராமங்களிலும் வீடாகச் சென்று தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பூசியின் அவசியத்தை வழியுருத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு செலுத்தி வருகின்றனர். இந்திலையில் அங்குள்ள கொனேரிகுப்பம் பகுதியில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தினர்.


அப்போது ஒரு வீட்டில், 40 வயது நபர் ஒருவர் தடுப்பூசி செலுத்தாதது தெரியவந்தது. அந்த நபருக்கு சுகாதார துறை உழியர்கள் தடுப்பூசி செலுத்த சென்றபோது சுகாதார ஊழியர்களை கண்டதும் அந்த கிராமவாசி அங்குயிருந்த ஒரு மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொன்டார், 



அவரை தடுப்பூசி போட கீழே வரும்படி ஊழியர்கள் பலமுறை வலியுறுத்தியும் அவர், தடுப்பூசி போட மாட்டேன்;  எனக்கூறி. கிழோ இறங்க மறுத்து விட்டார், சுகாதாரத்துறை ஊழியர்கள் கெஞ்சியும் அவர் வரவில்லை. இந்தக் காட்சியை படம்பிடித்து  இணையத்தில்  வெளியிட்டு உள்ளதால் இணையதளத்தில் அதிகமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form