திருச்சி தில்லை நகரில் இகோ டோபியா என்ற பெயரிலான இயற்கை அங்காடி திறப்பு விழா நடைபெற்றது.
திருச்சி தில்லைநகர் நான்காவது தி குறுக்கு சந்தில் முற்றிலும் இயற்கையில் விளையக்கூடிய உணவு வகைகள் விற்பனை செய்யும் இகோ டோபியா என்ற பெயரிலான புதிய இயற்கை அங்காடி திறக்கப்பட்டுள்ளது இதில் கோவையை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓசை காளிதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய அங்காடியை திறந்து வைத்தார்,
இந்த அங்காடியில் முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி பருப்பு உள்பட அனைத்து உணவு வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன,
நிகழ்ச்சியில் இகோ டோபியா உரிமையாளர் டாக்டர் பாரதிபவகரன் உட்பட உறவினர்கள் நண்பர்கள் திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.