திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிக் ஆணைக்குழு சார்பில் தேசிய மகா மக்கள் நீதிமன்றத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி கிளஸ்டோன் பிளசட் தாகூர் தலைமையில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வழக்குகள் குடும்ப நலம் மற்றும் மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள் நகராட்சி சம்பந்தப்பட்ட வழக்குகள் காசோலை மோசடி வழக்குகள், அனைத்து சார்பு நீதிமன்ற வழக்குகள் மற்றும் சிறப்பு சார்பு நீதிமன்ற வழக்குகளுக்கு 7 அமர்வு நீதிமன்றத்தில் சமரச தீர்வு அளிக்கப்பட்டது.
இதில்தான் பல்வேறு நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பிட்டு தொகை
காசோலையை முதன்மை மாவட்ட நீதிபதி கிளஸ்டோன் பிளசட் தாகூர் வழங்கினார்.
மேலும் பல ஆயிரத்திருக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு சமரச தீர்வு ஏற்பட்டு முடித்து வைக்கபட்டது இந்நிகழ்சியில்
கூடுதல் மாவட்ட நீதிபதிகள், தலைமைக் குற்றவியல் நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள்
கமலா நிக்கேந்தன் பள்ளி மக்கள் தொடர்பு அதிகாரி மோகன்
உடன் இருந்தனர். தேசிய மக்கள் நீதிமன்றம் ஏற்பாட்டினை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் செய்திருந்தார்.