தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மா.பா.சின்னதுறை, தலைமையில் திருச்சி அல்லித்துறை . புங்கனூர் இணைப்பு அரியாற்றுபாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து ஆறுகளையும் ஏறிகளையும் குளம் குட்டை உள்ளிட்ட அனைத்தையும் வருவாய்துறை பழைய ஆவணங்களில் உள்ளப்படி அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுக் கறைகளை அமைத்து பறவைகள், விலங்கினங்கள் பயன்படுத்தும் வகையில் பலன் தரும் மரங்களை நட்டு பாதுகாத்திடல் வேண்டும், மேலும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்திடவேண்டும் என வழியுருத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழக்கறிஞர் கெண்ணடி ஜனநாயக சமூக நல கூட்டமைப்புசம்சுதீன் மக்கள் உரிமை கூட்டணி ஜோசப் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் ஷைனிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஜார்ஜ் அகில இந்திய ஏழை மக்கள் கட்சி ஜான் பாஷாவழக்கறிஞர் கமருதீன் தமிழ் தேசிய பேரியக்கம் கவித்துவம் ஆரோக்கியம் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில்
விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால் தமிழ்நாடு தலைமைச் செயலகம் முன்பு தண்ணீர் அருந்தா போராட்டம். இந்த ஆறுகள் புனரமைப்பு சம்பந்தமாக தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் போராட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டது.