திருச்சி தெற்கு மாவட்டம்துவாக்குடி நகர எஸ்டிபிஐ கட்சி சார்பாக கொடியேற்றம் நிகழ்ச்சி, இறந்தவர் உடலை வைக்கும் குளிர்சாதன பெட்டி அர்ப்பணிப்பு, பொது மருத்துவமுகாம் என்கின்ற முப்பெரும் நிகழ்ச்சியானது துவாக்குடி நகர தலைவர் முஹம்மது யாசீன் தலைமையில் நடைபெற்றது.
திருவெறும்பூர் தொகுதி செயலாளர் ஹக்கீம் முகமது முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மண்டல தலைவர் இமாம் ஹஸ்ஸான் பைஜி, கலந்துகொண்டு எஸ்.டி.பி.ஐ கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பொது மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.
இதில் அப்போது சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். நிகழ்வின் ஒரு பகுதியாக இறந்தவரின் உடலை வைக்கும் குளிர் சாதன பெட்டி பொது பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி, மாவட்ட செயலாளர் மதர் ஜமால்,சுற்று சூழல் அணி மாவட்ட தலைவர் SS.ரஹ்மதுல்லாஹ், நிர்வாகிகள் முகமது சித்திக், மீரான் மைதீன்,இஸ்மாயில் ராஜா, முஸ்தபா, ரியாஸ், முகமது மைதீன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.