திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி தொடங்கப்பட்து
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்தந்த கட்சியின் சார்பாக போட்டியிட கூடியவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது.
அதிமுக தலைமைக் கழக அறிவிப்பின் படி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி திருச்சி அதிமுக வடக்கு புறநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி, தலைமையில் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில்
மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதியிடம் அளித்தனர்.
விருப்ப மனு 26/11/2021 முதல் கடைசி நாளான 29/11/2021 அன்று மாலை 5 மணி வரை விருப்ப மனு பெறப்படும் என தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கு.ப.கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராசு,இந்திரா காந்தி,மற்றும் நகரக் கழகச் செயலாளர்கள் ஒன்றிய கழக செயலாளர் பகுதி கழக செயலாளர்கள் வட்ட கழக செயலாளர்கள் கிளை கழக செயலாளர்கள் மாவட்ட அணி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.