திருச்சி. நவ:18,
உலக நீரழிவு நோய் விழிப்புணர்வு முகாம் திருச்சியில் 2. நாள் நடைபெற்றது.
உலக நீரழிவு நோய் தினத்தை முன்னிட்டு, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை, நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் திருச்சி டாக்டர். மோகன்ஸ் நீரழிவு சிறப்பு மையத்துடன் இணைந்து நீரழிவு நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இரண்டு நாள் சிறப்பு மருத்துவ முகாமை 17.11.2021 மற்றும் 18.11.2021 தேதிகளில் திருச்சியில் நடைபெற்றது
இதில்.
முதல் நாள் துவக்க விழாவில் பேராசிரியர் துணைவேந்தர் செல்வம் கலந்து கொண்டு துவக்கவுரையாற்றி முகாமை துவக்கிவைத்து தனது துவக்க உரையில் உலக அளவில் அதிகம் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் அதிலும் குறிப்பாக கேரளா மாநிலத்தில் அதிக நீரழிவு நோயாளிகள் இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும், நீரழிவு நோய் என்பது மிகவும் தீவிரமான நோய் என்றும் அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து யோகா மற்றும் உடற் பயிற்சிகளின் மூலம் உடலை ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்ள வேண்டும் என குறிபிட்டு பேசினார்.
அதோடு மகளிரியல் துறை, நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் திருச்சி டாக்டர். மோகன்ஸ் நீரழிவு சிறப்பு மையத்துடன் இணைந்து மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக பணியார்கள் நலன் கருதி இந்நிகழ்வினை நடத்தியது பாரட்டுக்குரியது என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக , பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை மகளிரியல் துறை ஒருங்கிணைப்பாளர் ந. முருகேஸ்வரி, வரவேற்புரை வழங்கி இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். நீரழிவு நோய்க்கான காரண, காரணிகளை விளக்கி, மாறிவரும் உணவு பழக்கமே நீரழிவு நோய்க்கான காரணம் என்றும், அது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது பாகுபாடின்றி தாக்குகிறது என்றும் நொறுக்கு தீணிதவிர்ப்பது மற்றும் தொடர் உயற்பயிற்சி செய்வது இந்நோய்க்கு தீர்வாக இருக்கும் என கூறினார்.
மகளிரியல் துறைஇயக்குநர் மற்றும்தலைவர். பேராசிரியை ந. மணிமேகலை, தனது வாழ்த்துரையில், மன அழுத்தம் நீரழிவு நோய்க்கு முக்கிய காரணியாக இருக்கிறது என்றும் பல்வேறு சமாளிக்கக்கூடிய யுக்திகளை கையாண்டு மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
நீரழிவு சிறப்பு மையத்தின் பொறுப்பாளர் திருச்சி டாக்டர். மோகன்ஸ்சீரஜ், தனது வாழ்த்துரையில் நீரழிவு நோய்க்கான காரணம் மற்றும் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்வதன் அவசியம் குறித்து பேசினார்.
நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் அ. லட்சுமிபிரபா, நன்றியுரையாற்றினார்.
100க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
முதல் நாள் முகாமில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பணியாளர்கள் கலந்து கொண்டு நீரழிவு நோய் இரத்த பரிசோதனை, இரத்த அழுத்தம் மற்றும் செவி உணர்வுதிறன் பரிசோதனை செய்து கொண்டனர்.
இரண்டாம் நாள் முகாமில் 60க்கும் மேற்பட்ட மாணக்கர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகபணியாளர்கள் கலந்து கொண்டு நீரழிவு நோய், இரத்தப் பரிசோதனை, இரத்த அழுத்தம் மற்றும் செவி உணர்வுதிறன் பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பெரியார் ஈவே.ரா. கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.