வா உ சிதம்பரம் பிள்ளையின் 85 வது நினைவு நாள் சோழிய வெள்ளாளர் சங்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி மேலசிந்தாமணி சோழிய வெள்ளாளர் சங்கத்தின் சார்பில் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளையின் 85 வது நினைவு நாளை முன்னிட்டு வா. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் திருவுருவப் படத்திற்கு தீப அஞ்சலி மற்றும் புஷ்ப அஞ்சலி செலுத்தி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் பேனா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு சோழிய வெள்ளாளர் சங்கத்தின் தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார் ஆலோசகர் மோகன்ராஜ்,மாருதிகண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கௌரவத் தலைவர் வழக்கறிஞர் செந்தில்நாதன், கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் பேனா ஆகியவை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் பிரபாகரன்,கேபிள் மோகன்,சரவணன், மற்றும் செயலாளர் சீனிவாசன், இனை செயலாளர்கள் நாயணன், ரமணி, மணிகன்டன், உட்பட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.