பொதுமக்களை வெள்ளப் பகுதியிலிருந்து உடனடியாக பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுச் செல்ல திருச்சி மாநகர காவல் பேரிடர் மேலாண்மை குழுவினர்களுக்கு மாநகர காவல் ஆணையர் அறிவுருத்தல்.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் திருச்சி மாவட்டத்தில் ஏரி குளங்கள் கால்வாய்கள் நிரம்பி பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன்,
அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குழுமாயி அம்மன் கோயில் அருகில் உள்ள ஆறுகண் மதகு மற்றும் தொட்டி பாலத்திலிருந்து மழை வெள்ள நீர் செல்வதை, திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு,
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர்.பி.எம்.என்.முஜிபுர் ரகுமான், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) திருச்சி மாநகரம் முத்தரசு ஆகியோர் பார்வையிட்டனர்.
இதில் திருச்சி மாநகர காவல் ஆணையர் வெள்ள அபாய தடுப்பு பணிகளை குறித்து ஆய்வு மேற்க்கொண்டும், காவல் துணை ஆணையர்கள், காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.
திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளம் காரணமாக
தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் பொதுமக்களை வெள்ளப் பகுதியிலிருந்து உடனடியாக பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு
அழைத்து வந்து தங்க வைப்பதற்கும் இரண்டு
திருச்சி மாநகர காவல் பேரிடர்
மேலாண்மை குழுவினர்களை தக்க பாதுகாப்பு உபகரணங்களுடன் உறையூர் மற்றும்
திருச்சி மாநகர காவல் ஆணையகரகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று
திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜி.கார்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்