திருச்சி, நவ.8-
திருச்சி,உய்யக்கொண்டான் வாய்க்கால் நிரம்பியதால் வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தொடரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தொடரும் கனமழையால் ஆறுகள்,ஏரிகள், குளங்கள் நிரம்பிவருகின்றன
இந்நிலையில் திருச்சி உய்யகொண்டான் திருமலை, உய்யக்கொண்டான் வாய்க்காலில் மழைநீர்,காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதால்
அப்பகுதியில் உள்ள சண்முகாநகர், எம்எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்ல முடியாமல் தவித்துவருகின்ரனர் வீட்டைச் சுற்றிலும் மழை நீர் தேங்கி இருப்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் தொற்றும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிந்து செல்வதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.