சென்னை வடபழனியில் உள்ள தமிழ் சினிமா கம்பெனியில் எதிர்கால இயக்குநர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது
அக்:27,சென்னை.
சில நாட்களுக்கு முன் இது சம்பந்தமாக தமிழ் சினிமா கம்பெனி சார்பில் அறிவிப்புக் கொடுக்கப்பட்டிருந்தது எதிர்பார்த்ததற்க்கும் மேலாக 126 பேர் கலந்துரையாடலில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துப் பதிவு செய்திருந்தனர்.
அவற்றில் 20 நபர்களை மட்டும் இந்தக் கூட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து தொடர்பு கொண்டோம். மற்றவர்களுக்கு அடுத்தடுத்த வாரங்களில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள இயக்குநரும் வசனகர்த்தாவுமான திரு. லியாகத் அலிகான் அவர்கள் இசைவு தெரிவித்திருந்தார்கள்.
, ஒரு படம் சம்பந்தமாக இயக்குநரும் நடிகருமான சரவண சக்தி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினேனோம். அவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தன் அனுபவங்களைப் பகிர சம்மதித்தார்.
எதிர்பாராத ஆச்சர்யமாக, இக் கலந்துரையாடல் கூட்டம் பற்றிக் கேள்விப்பட்டு முன்னறிவிப்பு எதுவுமின்றித் தானே வந்து கலந்து கொண்டார் நடிகர். மன்சூர் அலிகான்
இவர்களின் அனுபவப் பகிர்வு வந்திருந்த எதிர்கால இயக்குநர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது.
லியாகத் அலிகான், விஜயகாந்த் காலத்தின் சினிமா பற்றியும், தற்போதைய சினிமா நிலைமை பற்றியும் பேசினார்.
இடையில் கதைகளையும் சம்பவங்களையும் சுவைபடக் கூறி வந்திருந்தவர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.
சரவண சக்தி தான் சினிமாவில் பட்ட இன்ப துன்பங்களைப் பட்டியலிட்டு தற்கால சினிமாவின் ப்ளஸ் பாயிண்டுகளையும், நம் முன் நிற்கும் சவால்களையும் எடுத்துக் கூறினார்.
மன்சூர் அலிகான் அரசியல் எதுவும் பேசாமல் சினிமா சம்பந்தப்பட்ட நிறையக் கருத்துக்களை எடுத்துக் கூறினார்.
சினிமா வியாபாரம் பற்றிய புள்ளி விபரங்களை தமிழ் சினிமா கம்பெனியின் நிறுவனரும் தயாரிப்பாளருமான .எம்.கஸாலி எடுத்துக் கூறினார்
தமிழ் சினிமா கம்பெனி சார்பில் சிறிய பட்ஜெட் படங்களை பங்குதாரராய்த் தயாரிப்பது பற்றியும், தயாரிக்கப்பட்டு இதுவரை வெளிவராத படங்களை வெளியிடும் முயற்சி பற்றியும் பேசினார்.
வந்திருந்தவர்களில் 3 பேர் தனியாகச் சந்தித்து, உடனடியாகப் படம் ஆரம்பிக்கும் நிலையிலிருப்பதையும், பட்ஜெட்டில் கொஞ்சம் குறைவதையும் கூறி கம்பெனியோடு சேர்ந்து படம் பண்ண விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமா கம்பெனி சார்பில் புதிய படங்கள் தயாரிப்பதில் சில கொள்கைகளை வைத்துள்ளது:
எமோஷன் மற்றும் காமெடி கலந்த குடும்பக் கதைகள், காதல் கதைகள், துரோகம், பழி வாங்கல் போன்ற கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும்.
சுருக்கமாக; பாண்டிராஜ், ராசு மதுரவன், விக்கிரமன், வி.சேகர், விசு பாணியிலான படங்கள்!
ஆபாசப் படங்கள், சாதி மதம் சர்ச்சை கொண்ட படங்கள், அரசியல் சர்ச்சை படங்களைத் தயாரிக்க மாட்டோம். படத்தின் பட்ஜெட் என்பது வெறும் முதல் பிரதி என்ற அடிப்படையில் இல்லாமல், முதல் பிரதி மற்றும் ரிலீஸ் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் பட்ஜெட் போடப்பட்டு, யாரையும் எதிர்பார்க்காமல் படம் தயாரானவுடன் ரிலீஸ் வேலையும் மேற்கொள்ளப்படும்.
தமிழ் சினிமா கம்பெனி யின் கொள்கை பலருக்கும் உடன்பாடு உள்ளது என்பது அவர்களின் பதிலிலிருந்து தெரிந்துகொள்ள முடிந்தது.
கலந்துரையாடல் ஆரம்பித்தவுடன் வந்திருந்த அனைவருக்கும் சிறிய நோட் பேடும், பேனாவும் வழங்கப்பட்டன. குறிப்பு எழுதுவதற்கு அவர்களுக்குப் பயன்பட்டது.
இடையில் தேநீர் மற்றும் பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டன. மதியம் உணவும், மாலை தேநீரும் வழங்கப்பட்டன அனைவரும் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் வேலையை . ஏ.கே. சுடர் செவ்வனே செய்திருந்தார்.
படத்தின் வியாபாரம் உறுதியானால் தயாரிக்கப்படும் அனைத்துப் படங்களும் தடையின்றி ரிலீஸாகும்.
மக்களின் விருப்பம் என்ன என்பது பற்றி பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு எடுத்து அதன் அடிப்படையில் சிறந்த படங்கள் தயாரானால், நஷ்டம் என்பதே இருக்காது.
ஈரான், கொரியா, மலையாளப் படங்களைப் போன்ற மிகச் சிறந்த படங்கள் தமிழிலும் தயாராகும். அதற்கு எங்கள் தமிழ் சினிமா கம்பெனி செயல்படும்.
விரைவில் தமிழில் உலகத் தரமான படங்கள் தயாராகும், அவை பெருவாரியான மக்களைச் சென்றடையும், பணம் போட்டவருக்கு நல்ல லாபத்தைத் தரும் என்ற நம்பிக்கை மேலோங்கியுள்ளது.
அடுத்த கூட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்