தமிழ்நாடு பிரஸ் மீடியா புரொடக்சன் அசோசியேசன் (தமிழ்நாடு பத்திரிகை ஊடக பாதுகாப்பு சங்கம்) மாநில நிர்வாகிகள் கூட்டம் 23ஆம் தேதி மாலை திருச்சி புத்தூர் ஆபீஸர் காலனியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அல்லூர் கே.சீனிவாசன்தலைமை வகித்தார். எ.எகியாமுன்னிலைவகித்தார். கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
இதில் அல்லூர் கே.சீனிவாசன் மாநில தலைவராகவும், எ.எகியா துணை தலைவராகவும், எம்.முகமது இக்பால் செயலாளராகவும், டி.கார்த்திகேயன்,ஈபி.வா.பாலாஜி ஆகியோர் துணைச் செயலாளர்கள் ஆகவும், பி.ஜெயபாலன்பொருளாளராகவும், பி.பஜீலுதீன்,கேகே.மஸ்தான், டி.கோபிநாத், டி.நவீன் மணி, செபாஸ்டின், எ.முகமது அலி ஜின்னா ஆகியோர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.முன்னதாக துணைச் செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். கூட்டத்தின் முடிவில் பொருளாளர் ஜெயபாலன் நன்றி கூறினார்.
வாழ்த்துக்கள் நண்பா
ReplyDelete