பாதாள சாக்கடை பணிகளை தாமதப்படுத்தக் கோரி. திருச்சி பாலக்கரை வியாபாரிகள் மற்றும்.... பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு,
திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதி வியபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்தில் மனு அளித்தனர்.
திருச்சி மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது... இந்நிலையில் பாலக்கரை பகுதியில் உள்ள சபியுல்ல மருத்துவமனையில் இருந்து பாலக்கரை காலணி கடை வழியாக 27/ 9/ 2021 அன்று பாதாள சாக்கடை பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
மேலும் சென்ற வருடம் கொரோனா நோய் தொற்று காரணமாக தீபாவளி வியாபாரங்கள் செய்ய முடியாமல் வியபாரிகள் மிகவும் கஷ்டப்பட்டனர்.
அரசு தளர்வுகள் அறிவித்துள்ளது தீபாவளி பண்டிகைக்கு
வியபாரிகள் வியபாரம் செய்வதற்க்கு
சரக்குகள் வாங்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில் தீபாவளிக்கு சில தினங்களே இருப்பதால் இப்பகுதியில் பாதாள சாக்கடை தோன்றினாள் பொது மக்களுக்கும் வியபாரிகளும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கப் படுவார்கள்.
எனவே இப்பகுதியில் மட்டும் பாதாள சாக்கடை திட்டத்தை தாமதப்படுத்த வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக மனு அளித்ததாக தெரிவித்தனர்,